இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Date:

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது. இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான அதிகபட்ச வருகையாகும்.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்த 23இலட்சத்து 33ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை இன்றைய தினம் முறியடிக்கப்பட்டு இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் 23இலட்சத்து 33ஆயிரத்து 797 ஆவது சுற்றுலாப் பயணி இன்று காலை வரவேற்கப்பட்டதாக இலங்கை சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.

‘டித்வா’ புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியானது நாட்டின் சுற்றுலாப் பயணத்தில் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமைவதுடன், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை மீதான நம்பிக்கையையும் அதன் மீண்டெழும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது.

Popular

More like this
Related

தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு...

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக...

களுத்துறையில் 8 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு...

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...