கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Date:

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு இலங்கை ஹஜ் பயண முகவர் சங்கம் நிவாரண நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. கம்பளை டவுன் ஜும்மா மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைக்கு இந்நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 100 மெத்தைகள், கேஸ் குக்கர்கள், தலையணைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் இலங்கை ஹஜ் பயண  முகவர்  சங்கத்தின் தலைவரும், அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் எச்.எம். அம்ஜதீன் மற்றும் முன்னாள் செயலாளர் முகமது ஜசீம் ஆகியோர் கலந்து கொண்டு இந் நிவாரணப்பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...