கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான மீதொட்டமுல்ல அரச நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகம் மற்றும் கொலன்னாவ டெரன்ஸ் என். டி. சில்வா மகா வித்தியாலய வளாகங்களில், குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் குறுகிய செயற்பாடு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர், சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களின் இந்த முன்மொழிவானது, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் முகாம் அதிகாரிகளால் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டன.
ஏற்பட்ட இந்த அனர்த்தமானது சிறுவர்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைத்ததுள்ளதுடன், அன்புக்குரியவர்களின் இழப்பு, பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கல்வி தடைப்படுதல் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. இது தனிமை, உணர்ச்சி ரீதியான துயரம், பயம் மற்றும் செயற்பாடு குறைந்த நிலை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.
இந் நிகழ்ச்சிகள், சிறுவர்கள் இத்தகைய உணர்வுகளிலிருந்து மீண்டுவருவதற்கும், இயல்பு நிலையை மீண்டும் பெறுவதற்கும் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டனவாகும்.

