நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் வலியூட்டும் வெளிப்பாடு..
நான் இந்தக் கட்டுரையை எழுதுவது ஒரு செய்தியைப் பகிர்வதற்காக மட்டும் அல்ல; நான் நேரடியாக அனுபவித்த வேதனையையும், நாட்டின் நிர்வாகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பதனையும் வெளிப்படுத்துவதற்கேயாகும்.
இந்த அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய ஒருவனாக, நான் கண்டவை, அனுபவித்தவைகளையும் எவ்விதமான மெருகூட்டலுமின்றி இங்கு குறிப்பிடுகின்றேன்.
சிலாபம் தெதுறு ஓயா ஆற்றைத் தாண்டி, ஹைலேண்ட் பால் சேமிப்பு நிலையத்துக்கு அருகில் நான் மற்றும் சுமார் 250 பேர் மூன்று நாட்களுக்கு மேலாக வெள்ளநீரால் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம்.
உயிர் பிழைப்பதே ஒரு போராட்டமாக இருந்த தருணங்கள். எங்களில் சிலர் கண்முன்னே நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
“இன்னும் சற்று நேரத்தில் உதவி வருகிறது.”
“சரியாக ஐந்து மணிக்கு உணவுப் பொதிகள் அனுப்புகிறோம்.” “கவலைப்பட வேண்டாம், உங்களை பாதுகாக்க நடவடிக்கை நடைபெறுகிறது.”
ஆனால் எங்களிடம் வந்தது எந்த உதவியும் அல்ல வெறும் வெறுமையான வாக்குறுதிகள் மட்டுமே.
நேர்மையாகச் சொன்னால், இப்பதில்கள்
ஜனாதிபதியின் துரித நடவடிக்கைகள் என்ற கட்டளையானது அதிகாரிகளால் உதாசீனம் செய்யப்பட்ட துயரமான நிலையாகக் கண்டோம்.
கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் துரிதநடவடிக்கை தொடர்பில் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததை நாங்களும் கேள்விப்பட்டோம்.
இதன் விளைவாக, நிவாரண வேலைத் திட்டம் முழுமையாக தோல்வியடைந்ததை நாங்கள் ( 250 பேரும்) நேரில் அனுபவித்தோம்.
குழந்தைகள் பட்டினியால் வாடினார்கள். இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று தரமற்ற நீரை குடித்தார்கள். நாங்கள் அனைவரும் எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் எனக்கு சொல்லித்தந்த பாடம்: அனர்த்தம் இயற்கையின் செயல்;
ஆனால் அதை வேதனையாக மாற்றியது மனிதர்களின் பொறுப்பின்மை.
இதுவே அந்த மூன்று நாட்களில் நான் கண்ட வாழ்க்கையின் கொடுமையான உண்மை.


