உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

Date:

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுமார் 3இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசினார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.

எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது.

நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன.

இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ‘ ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற  பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.  இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக  தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...