ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

Date:

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி விகாரை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

குறித்த தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்றும், தையிட்டி விகாரைக்கு தனியான காணி இருந்தும் பொதுமக்களின் காணியில் அந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும் நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...