மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

Date:

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ‘புலத்திசி’ நகர கடுகதி ரயிலும் அன்றிலிருந்து தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

உதய தேவி ரயில் சேவையையும் அனர்த்த நிலையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

புனரமைப்புப் பணிகளின் பின்னர் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...