வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளமை தற்போது வைரலாகியிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) டொனால்ட் ட்ரம்ப் தனது “ட்ருத் சோஷியல்” என்ற சமூக ஊடக பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட இந்தப் படத்தை, விக்கிபீடியாவின் உத்தியோகபூர்வ பக்கத்தில் தனது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளதாக ட்ரம்பின் “ட்ரூத் சோஷியல்” பதிவு வெளிப்படுத்துகிறது.
இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸ் செயல்பட்டு வரும் நிலையில், தன்னை பதில் ஜனாதிபதியாக டிரம்ப் அறிவித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
