நிபா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்.

Date:

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி வலியுறுத்தினார்.

இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் எழுந்தால் தேவையான அனைத்து பரிசோதனை கருவிகளும் நாட்டில் கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது.

இதனால் தாய்லாந்து, சிங்கப்பூர், ‍‍ஹெங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை உள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...