‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
