புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
