நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

Date:

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...