மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

Date:

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” எனப் பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “நாடே ஒன்றிணைவோம்” தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான 07/2026 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் ஆகிய இரண்டு அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வையும், மேம்பட்ட சமூக உரையாடலையும் உருவாக்குவதற்காக இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் பரந்த அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரச அமைச்சுகள் உள்ளிட்ட அனைத்து இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பன்முகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையமாகக் கொண்டு பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகத் தொடர்புடைய அரச நிறுவனங்கள் ஊடாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகளைத் தடையின்றி முன்னெடுக்கும் அதேவேளை, இந்தத் தேசியத் திட்டத்தை வெற்றிகொள்வதற்கு அத்தியாவசியக் காரணியான பரந்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இனைத்துத் திட்டங்களினதும் எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...