அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

Date:

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், ஈரான் பாதுகாப்புத் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலை குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடியோவையும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சியை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

அதேபோல, ”ஈரான் ராணுவம் போரை கைவிட்டு சரணடைய வேண்டும், இல்லையென்றால் அதிக பலியை சந்திக்க நேரிடும். ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எந்தச் சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று ஈரான் பாதுகாப்புத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...