இலங்கையின் கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் இல்லை’

Date:

தற்போதைய நிலையில் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல்  மேலும் வீழ்ச்சியடைவதற்கான பாரிய அபாயம் இல்லை என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த விலை அதிகரிப்பு என்பன, உள்நாட்டு பொருளாதார முகாமைத்துவப் பிரச்சினைகள் மற்றும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக உருவானவை என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அக்காலப்பகுதியில் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிலைமைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறான எரிசக்தி அதிர்ச்சிகளை முகாமைத்துவம் செய்வதில் 2022 ஆம் ஆண்டு இருந்த நிலைமையை விட, இலங்கை தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...