ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

Date:

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய்

உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க அதிகார வர்க்கம் துடிக்கிறது. “ஊடகமே அதிகாரம்” (Media is Power) என்பதை உலகம் இன்று மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டிருக்கிறது.

ஊடக தர்மத்தை அடுத்தவர்களுக்கு போதித்துக்கொண்டு தனது நாட்டுக்குள்ளேயே கடுமையான ஊடகத் தணிக்கையை இஸ்ரேல் விதித்தது. கடந்த 3 வருடங்களில் பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையைத் தடுத்துவிட்டு, இதுவரை 248 ஊடகவியலாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.

ஏன் இந்த அடக்குமுறை? ஏனெனில், அவர்கள் உண்மையை விட அதிகாரத்தையே அதிகம் விரும்புகிறார்கள்.

பின்வரும் இந்த 3 உண்மைகள் உங்கள் சிந்தனைக்காக:

 உண்மை 1: 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட TikTok, இஸ்ரேல் பற்றிய உலகளாவிய பார்வையை மாற்றியமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தது. பலகீனர்களின் குரல் உலக அரங்கில் ஒலிக்கத் தொடங்கியது.

உண்மை 2: “நாம் டிக்டாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க சியோனிஸ்டுகளிடம் நெதன்யாகு பகிரங்கமாகத் தெரிவித்தார். உண்மையான தகவல்கள் பரவுவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

உண்மை 3: ஜனவரி 23, 2026: அமெரிக்க சியோனிஸ்டுகள் டிக்டாக்கின் கட்டுப்பாட்டைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

“யார் ஊடகத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.”

ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக மாறும்போது, உண்மை மௌனிக்கப்படுகிறது. நம்முடைய கதைகளை, நம்முடைய வலிகளை நாமே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் குரலைத் தொடர்ந்து ஒலிப்போம்! .

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...