மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

Date:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகளால்,எரிபொருள் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட பீதியையடுத்து நேற்றுக்காலை பத்து மணிக்கிடையில் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெட்ரோலை விநியோகித்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேபோன்று நேற்று முன்தினமும் 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெட்ரோலை பொது மக்களுக்காக விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

அதிகரித்த தேவையின் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

மோசடிக்காரர்கள் தற்போதைய நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனால் வழக்கமான நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்களில் வழங்கப்படாது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போரினால் ஏற்பட்ட கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் போதுமான எரிபொருள் தற்போதைய பெட்ரோல் கையிருப்பு 37 நாட்களுக்கு போதுமானது.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமே எமக்கான கேள்வி மனு சமர்ப்பிக்கப்பட்ட எரி பொருட்கள் கிடைக்கும்.

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...