மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் நேற்று பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வான்பரப்பு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கின்றன.

இதற்கிடையில், ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் நேற்று மாலை 04.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...