ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

Date:

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கியமை எமது நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்த முடிவு பல தசாப்தங்களாக எமது நாட்டை வழிநடத்தி வரும் சுதந்திரமான மற்றும் அணிசேரா கொள்கையின் பெருமைமிக்க மரபிற்கு இணங்க அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலை ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் கீழ் ஒரு ‘அமைதி வலயமாக பேணுவதற்கு இலங்கை கொண்டுள்ள கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.

பல நாடுகள் அழுத்தங்களுக்கு அடிபணியும் தற்போதைய சூழலில், இலங்கை எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச விதிமுறைகள் மீதான மரியாதை, சமநிலை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்துகிறது.

இந்த கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியதற்காக ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கையராக இருப்பதில் நாம் ஏன் பெருமை கொள்கிறோம்,  பரந்த இதயம் கொண்ட சிறிய தீவான இலங்கை, கொள்கை ரீதியான இராஜதந்திர விழுமியங்களால் பெருமை கொள்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...