அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

Date:

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நேற்று (16) துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வருகை தந்த அவர்கள், ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை முன்னெடுக்கப்படவுள்ள சமாதானத்திற்கான பாதயாத்திரையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பாதயாத்திரையானது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறுகிறது.

அதி வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதி மரக்கன்றுடன் இந்த பாதயாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார், தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இந்த சமாதான பாதயாத்திரைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்த பாதயாத்திரையின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுரிமைகள், பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறன்கள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...