அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

Date:

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

சுகாதார அமைச்சர் தனது அரசியல் பிம்பத்தை மெருகேற்றிக் கொள்வதற்காக, பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றார்.

கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்றப் பட்டியல் முழுமையாக விகாரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் நாட்டில் சுமார் 150 கஷ்டப் பிரதேச வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்விதத் தயார்நிலையும் இல்லை.

அதேவேளை, சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி தவறான தகவல்களையும் தரவுகளையும் புள்ளிவிபரங்களை முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது என்றும் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...

மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள்...