ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

Date:

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, +94115226126, +0115226126 ஆகிய உத்தியோகபூர்வ இலக்கங்களை ஒத்த எண்கள் மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-தேசிய அடையாள அட்டையை (e-National Identity Card) பதிவு செய்வதாகக் கூறி, அரச இலச்சினையைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் போலி மொபைல் செயலி (Mobile App) ஒன்றையும் உருவாக்கியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாம் இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ள ஆட்பதிவுத் திணைக்களம், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஒத்த https://drpgov-lk[.]com என்ற போலி இணையதளம் போன்றவற்றிடம் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளுக்குப் பலியாகாமல் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...