உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

Date:

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்ட உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகளும், நீதியைக் கோரும் அமைதி பேரணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்று காலை 8:45 மணிக்கு குண்டு வெடித்த நேரத்தில் அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படும்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...