சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

Date:

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவும். மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் 05 முதல் 15 வரை, சூரியன் வடதிசை நோக்கி நகரும்போது, இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும். சிலாபம், பிங்கிரிய, ஹல்மில்லவௌ, பண்டுவஸ்நுவர, கொகரெல்ல, கௌடுபலெல்ல, கொப்பாவெளி மற்றும் கிரங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் 12:12 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...