தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி வரை 17 சதவிகிதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ( 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 56.81 சதவிகித (3.25 கோடி) வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல், கடந்தமுறை சென்னையில் மொத்த வாக்குப் பதிவே 59.06 சதவிகிதம் என்ற நிலையில், தற்போது பகல் 1 மணிக்கே 54.58 சதவிகிதம் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 76.6 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை அதிகளவிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால் மொத்த வாக்கு எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக நடைபெற்ற புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...