மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

Date:

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் பங்கேற்கின்றனா். இதையொட்டி, இஸ்லாமாபாத் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார தற்காலிக போா்நிறுத்தத்தை, ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த 10 அம்சத் திட்டத்தை ஈரான் முன்வைக்கவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீா் ஆகியோா் பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இஸ்லாமாபாதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு 2 நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழைய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழல் நிலவினாலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கடும் தாக்குதல்கள் மத்தியஸ்த முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...