ஆட்சியை நெருங்கும் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய கட்சியான தவெக 115 இடங்களில் முன்னிலை!

Date:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக 115 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து, தமிழக வரலாற்றில் புதியதாக அரசிய கட்சி தொடங்கி பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தவெக கட்சி முன்னிலை வகித்து வருவது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணிக்கை திங்கள் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி 56 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 இடங்களிலும், தவெக 105 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை.

திமுக கூட்டணியில் திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், தேமுதிக 2 இடங்களிலும் , விசிக 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

அது போல் அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் அதிமுக 67 இடங்களிலும் பாஜக 1 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

தவெகவை பொருத்தமட்டில் 115 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...