ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

Date:

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம், மேலும் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது – என்றார்.

புதன்கிழமை பிற்பகுதியில், குடியரசுக் கட்சி ஆளுநர் வேட்பாளர் ஒருவருக்கான காணொளிக் கூட்டத்தின்போது ட்ரம்ப், ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்றும் உறுதியளித்தார்.

அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

இந்த நிலையில், அமெரிக்கா முன்வைத்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், தெஹ்ரான் தனது கருத்துக்களை இறுதி செய்த பின்னர் மத்தியஸ்தரான பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என...

இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு...

இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...

2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான...