பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

Date:

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவது தொடர்பாக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு சம்பந்தமாக, பசில் ராஜபக்ஷ இன்று (22) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தற்போது உடல்நலக்குறைவுக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றில் முன்னிலயாக முடியாமல் போனது என தெரிவித்து, மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைக் கருத்தில் கொண்டும், பசில் ராஜபக்ஷ பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்தில் கொண்டும், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...