மினா கூடாரங்களில் இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களுக்கு ஹிஸ்புல்லாஹ் MP கண்டனம்

Date:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் நோக்கில் புனித மக்கா நகரிற்கு சென்றுள்ள இலங்கை ஹாஜிகள், மினா கூடாரங்களில் மிகவும் கவலைக்கிடமான மற்றும் மனிதாபிமானமற்ற அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அங்கு தங்கியுள்ள பல ஹாஜிகள் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மினா பகுதியில் ஹாஜிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடாரங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், வயோதிபர்கள், பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்ட பலர் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளதாக ஹாஜிகள் எமது கவனத்திற்கு கொண்டுள்ளனர்.

குறிப்பாக, போதியளவு மலசலகூட வசதிகள் இல்லாமையால், ஹாஜிகள் பல மணிநேரங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடும் வெப்பநிலையிலும் உடல் சோர்விலும் இவ்வாறான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று, உணவு விநியோக நடவடிக்கைகளிலும் கடுமையான ஒழுங்கின்மைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உணவைப் பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், சில இடங்களில் தேவையான அளவு உணவுப் பொருட்களும் சரிவர கிடைக்கவில்லை என ஹாஜிகள் முறையிட்டுகின்றனர்.

மேலும், ஆண் – பெண் கலப்பு, கடுமையான இடநெருக்கடி, போதிய ஓய்வு வசதியின்மை மற்றும் கூடார முகாமைத்துவ குறைபாடுகள் காரணமாக, ஹாஜிகள் தங்களின் மார்க்கக் கடமைகளை மனநிம்மதியுடனும் அமைதியுடனும் நிறைவேற்ற முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ் யாத்திரையை வாழ்நாள் கனவாகக் கொண்டு, பல இலட்சம் ரூபாய் செலவழித்து சென்றுள்ள இலங்கை ஹாஜிகள் இவ்வாறான சிரமங்களையும் அவமானகரமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வது மிகுந்த கவலைக்கிடமானதுடன் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இத்தகைய பாரிய அசௌகரியங்கள் இதற்கு முன்னர் பெருமளவில் பதிவாகாத நிலையில், இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஹாஜிகள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, இனிவரும் காலங்களில் இத்தகைய நிர்வாக அலட்சியங்களும் அசௌகரியங்களும் மீண்டும் ஏற்படாத வகையில் திட்டமிட்ட மற்றும் பொறுப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...