வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

Date:

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும், போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தற்போது தயார் செய்துள்ளனர்.

அத்துடன் இம் முறையும் முக்கியமாகப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம், ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும், குறிப்பாகத் தனசாலைகள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமையில் இருப்பார்கள்.

இதேவேளை , அலட்சியமாகவும் அபாயகரமாகவும் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இயக்கப்படும் ஏதேனும் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி தொடர்பாக 070-4755600 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கோ அல்லது 119, 188 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...