ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

Date:

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட மத வழிபாடுகள் நடைபெறும் பிரதான பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும் விசேட போக்குவரத்து திட்டங்கள், நடமாடும் ரோந்துப் பணிகள், துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 மற்றும் 118 ஆகிய அவசர இலக்கங்கள் மூலமாகவோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...