‘என் தந்தை வெறுப்புக்கு எதிரானவர்’-மகள் ஹவா உருக்கம்: சான் டியாகோ துப்பாக்கிச் சூட்டில் பல உயிர்களைக் காப்பாற்றி வீரமரணமடைந்த பாதுகாவலர் அமீன் அப்துல்லா!

Date:

அமெரிக்காவின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசலான ‘இஸ்லாமிய மையத்தில்’ (Islamic Center of San Diego) கடந்த திங்கள்கிழமை மதியம் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், இருவர் உட்பட பாதுகாப்பு காவலர் அமீன் அப்துல்லா (51) சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதைத் தடுத்து, அங்குள்ள பள்ளியில் இருந்த 140 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாதுகாவலர் அமீன் அப்துல்லாவின் துணிச்சலான செயல் தற்போது “ஹீரோ” ஆகப் போற்றப்படுகிறது.

“அவரது நடவடிக்கைகள் வீரமிக்கவை, சந்தேகத்திற்கு இடமின்றி பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு: சம்பவம் நடந்தது என்ன?

திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகலுக்கு சற்று முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிகாரிகள் பள்ளிவாசலுக்குள் விரைந்தபோது, அங்கிருந்து சில தெருக்களுக்கு அப்பால் மற்றொரு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு அழைப்புகள் வரத் தொடங்கின.

துப்பாக்கி ஏந்திய இரு நபர்கள் பாதுகாவலரைக் கடந்து ஓடியபோது, பள்ளிவாசலுக்கு இருந்த அச்சுறுத்தலை உணர்ந்த 51 வயதான அமீன் அப்துல்லா, உடனடியாகச் செயல்பட்டு சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

அதன் பின்னரும், அமீன் அப்துல்லா பள்ளிவாசலை உடனடியாக லாக்டவுன் (முடக்கம்) செய்யுமாறு வயர்லெஸ் மூலம் அறிவித்துவிட்டு, தொடர்ந்து அந்த இருவருடன் போரிட்டார்.

சான் டியாகோ பொலிஸ் சீஃப் ஸ்காட் வால் (Scott Wahl) செவ்வாய்க்கிழமை செய்தி மாநாட்டில் பேசுகையில்,

“அவரது நடவடிக்கைகள், சந்தேகத்திற்கு இடமின்றி, அந்த இரு நபர்களையும் பள்ளிவாசலின் முக்கியப் பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தாமதப்படுத்தி, திசைதிருப்பி, தடுத்தன.

அந்த சமயத்தில் பள்ளிவாசலுக்குள் வெறும் 15 அடி தூரத்தில் 140 குழந்தைகள் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் உயிரிழந்தார்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற இருவர் சான் டியாகோ அதிகாரிகளால் மன்சூர் காசிஹா (78), மற்றும் நாதிர் அவாத் (57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  • மன்சூர் காசிஹா (78): ‘அபுல்ஈஸ்’ என்று அழைக்கப்படும் இவர், 1986 முதல் கடந்த 40 ஆண்டுகளாக பள்ளிவாசலின் கடையை நிர்வகித்து வந்த பள்ளிவாசலின் தூணாகக் கருதப்படுபவர். துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் முதல் ஆளாக 911 அவசர எண்ணிற்கு அழைத்தவர் இவர்தான்.

  • நாதிர் அவாத் (57): பள்ளிவாசலுக்கு எதிரே வசிப்பவர், இவரது மனைவி பள்ளிவாசல் பள்ளியின் ஆசிரியர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மக்களைக் காப்பாற்ற ஓடிவந்து மன்சூர் காசிஹாவுடன் இணைந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் துப்பாக்கிதாரிகளின் கவனத்தை பள்ளிவாசல் பார்க்கிங் பகுதிக்கு திசைதிருப்பியதால், அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. சந்தேக நபர்களால் அவர்கள் வளைத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எனினும், இவர்களின் இந்த கூட்டு முயற்சியால் துப்பாக்கிதாரிகள் பள்ளிவாசலுக்குள் நுழைய முடியாமல் தங்களது வாகனத்தை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“நமது மூவரின் உயிரும் வீணாகப் போகவில்லை” என்று பள்ளிவாசலுக்கு சீஃப் ஸ்காட் வால் கூறினார்.

கண்ணீர் மல்க அஞ்சலி

அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்துல்லா தனது சொந்த உயிரைப் பொருட்படுத்தாது பள்ளி மற்றும் உள்ளே இருந்தவர்களை எச்சரித்தார். மற்றவர்களைக் காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்த ஒரு உண்மையான ஹீரோ அவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அப்துல்லாவின் மகள் ஹவா அப்துல்லா (Hawaa Abdullah) கண்ணீருடன் கூறுகையில்:

“என் தந்தை எந்த வகையான வெறுப்புக்கும் எதிராக நின்றவர். எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பதில் அவர் தான் முதன்மையானவர். இங்குள்ள அனைவரையும் பாதுகாக்க அவர் தனது பணியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். அவர் ஒரு அற்புதமான தந்தை, தினமும் இரவு தன் தாயை அழைத்து நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மகன்.”

இஸ்லாமிய மையத்தின் இமாம் தாஹா ஹசானே (Taha Hassane) கூறுகையில், “அப்துல்லா எப்போதும் புன்னகையுடன் இருக்கும் ஒரு அன்பான மனிதர். அவர் மட்டும் இல்லையென்றால் இந்த உயிர்ச்சேதம் இன்னும் மோசமாக இருந்திருக்கும். நாங்கள் அவரை நினைத்துப் பெருமைப்படுகிறோம்” என்றார். மேலும், மன்சூர் காசிஹா குறித்துப் பேசுகையில், “அவரது தினசரி உதவி இல்லாமல் மசூதியில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, அவரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்” என்றார்.

விசாரணை மற்றும் வெறுப்புக் குற்றம் (Hate Crime)

துப்பாக்கிச் சூடு நடத்திய 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கான சாத்தியமான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர், ஆனால் தற்போது இது ஒரு ‘வெறுப்புக் குற்றமாக’ (Hate Crime) கருதப்படுகிறது. சந்தேக நபர்களின் வாகனத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான (Anti-Islamic) வெறுப்பு எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஏபிசி நியூஸ் (ABC News) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FBI சிறப்பு முகவர் மார்க் ரெமிலி (Mark Remily) கூறுகையில், பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த சந்தேக நபர்கள் யாரை வெறுக்கிறோம் என்பதில் எந்த பாகுபாடும் காட்டவில்லை என்றும் கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) இந்தத் தாக்குதலை “கண்டிக்கத்தக்கது” மற்றும் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடினார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்காகவும் அனைத்து அமெரிக்கர்களும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பள்ளிவாசலின் இயக்குநர் தாஹா ஹசன் மற்றும் CAIR அமைப்பின் சான் டியாகோ இயக்குநர் தழீன் நிஜாம் ஆகியோர், “நாங்கள் இந்த கொடூரமான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொழுகைக்கு வரும்போதோ அல்லது தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதோ யாரும் தங்கள் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டிய நிலை வரக்கூடாது” என்று தங்களது ஆழ்ந்த இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

வெசாக் பண்டிகை தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று (20) அலரி...

பிள்ளையானை இயக்கியது மஹிந்த குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட உண்மைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத்...

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் விரைவில்

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகளை ஜூன் மாதம் 10ம் திகதி...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை!

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம்...