பிள்ளையானை இயக்கியது மஹிந்த குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட உண்மைகள்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சென்றிருந்ததாகவும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிப்பதாக அவர்கள் கூறியிருந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரே வாரத்துக்குள் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு வெளிக்கொண்டு வந்திருந்தார்.

பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் விரைவில்

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகளை ஜூன் மாதம் 10ம் திகதி...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை!

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம்...

சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...