வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

Date:

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கம்பஹா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கம்பஹா கல்வி வலயத்திலுள்ள சிங்கள தமிழ் மொழி மூல 45 பாடசாலைகளிலும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயமே இம்முறைய உயர்தர பரீட்சை அடைவுகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

உயர்தர பரீட்சை அடைவுகளின் தர வரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள ஒரே முஸ்லிம் பாடசாலையாகவும் அல் பத்ரியா இடம் பிடித்துள்ளது.

அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 21 பேரில் 19 பேர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது 90.48 வீத அடைவாகும். இவர்களில் வர்த்தகத் துறையில் தோற்றிய 09 பேரில் 09 பேரும் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அல் பத்ரியாவுக்கு அடுத்ததாக 88.89 வீதத்துடன் கம்புறாகல்ல பன்னில ஆனந்த மகா வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. பிரபல பாடசாலைகளான ரத்னாவலி பாலிகா (03), பண்டாரநாயக்க சென்ட்ரல் (மத்திய கல்லூரி) (04), யசோதரா தேவி பாலிகா (06) போன்றவற்றைப் பின்தள்ளியே அல் பத்ரியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...