இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

Date:

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பௌத்த-முஸ்லிம் உரையாடல்: மதங்களுக்கிடையிலான புரிதலுக்கான கையேடு” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (12) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

தன்வீர் நிறுவனம் (Tanweer Institute) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கலாநிதி ஆசாத் சிராஸ் மற்றும் திரிபிடகத்தில் நிபுணத்துவம் பெற்ற ரமேஷ் மதுசங்க ஆகியோரின் கூட்டு ஆய்வின் மூலம் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வணக்கத்திற்குரிய கல்லெல்லே சுமனசிறி தேரர் தலைமை தாங்குவார்.

தலைமை விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொள்ளவுள்ளார்.

 கௌரவ விருந்தினர்களாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சமந்த இலங்ககோன் நூல் விமர்சனத்தை நிகழ்த்துவார்.

இந்த புத்தகம் இலங்கையின் இரு பிரதான மதத் தத்துவங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் தொடர்புகள் குறித்த கல்விசார் ஆய்வுகளை உள்ளடக்கியது.

மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...