வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!

Date:

வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன.

தென் மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார்.

கடந்த 4ம் திகதி பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால் பாடசாலைகள் மூடப்பட்டன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த 56 மாணவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்குள் சுகாதார பாதுகாப்பு நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நீர் பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...