காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

Date:

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் உணர்வு பூர்வமாகவும், தத்ரூபமாகவும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ‘ஹிந்த் ரஜப்’ (Hind Rajab) என்ற திரைப்படம் தற்போது இலங்கைத் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு சிறுமியின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், காசா மக்களின் அவல நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய படைப்பாகும்.

2025 செப்டம்பரில் நடைபெற்ற 82-வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது, திரைப்பட விழா வரலாற்றிலேயே மிக நீண்ட நேரமாக 23 நிமிடங்கள் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி (Standing Ovation) பாராட்டு தெரிவித்தனர். அங்கு இத்திரைப்படம் புகழ்பெற்ற ‘வெள்ளிச் சிங்கம் – நடுவர் குழுவின் பெரும் விருதை’ (Silver Lion Grand Jury Prize) வென்றது.

98-வது ஆஸ்கார் விருது விழாவில் (Academy Awards) சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் துனிசியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் கோல்டன் குளோப் (Golden Globe) மற்றும் பாஃப்டா (BAFTA) விருதுகளுக்கும் இது பரிந்துரைக்கப்பட்டு உலகளாவிய வசூலில் சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் நேர அட்டவணைகள் மற்றும் திரையரங்குகளின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களைக் கீழே காணலாம்.

நேற்று (ஜூன் 18,) கொழும்பு மெஜஸ்டிக் சினிப்ளெக்ஸில் பிரத்தியேகக் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று ஜூன் 19, 2026 முதல் பொதுமக்களின் பார்வைக்காகத் திரையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...