டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

Date:

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

மாத்தறை மாவட்டம் தெனியாயப் பகுதியைச் சேர்ந்தவரும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் 46-வது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவருமான சந்தலி தாரகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இறப்பதற்கு முன், அவர் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கு, “நான் இறந்துபோகவில்லை என்றால் வருவேன்” என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தார்.

 

இந்த நிலையலி அவளது மறைவு பல்கலைக்கழகத்தையே ஆழ்ந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சந்தலி தாரகா மறைவு குறித்து சக மாணவர்கள் சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுத் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், இனிவரும் எந்தவொரு பிறவியிலும் அவருக்கு இது போன்ற அகால மரணம் நேரிடக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...