ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை வங்கி கணக்குகளுக்கு!

Date:

அஸ்வெசும நலன்புரி விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குரிய ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுப் பணம், நாளை  பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.

இதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 270,025 பயனாளி குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது.

இதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை சுமார் 328 கோடி ரூபா. இந்த முழுத் தொகையையும் நாளை தினத்திற்குள் அந்தந்த பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் வைப்புச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, தங்களுக்குரிய கொடுப்பனவுகளை நாளை (23) முதல் எவ்வித தடையுமின்றி தங்களது அஸ்வெசும பயனாளி கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...