வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

Date:

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள் நினைவுகூறுகின்றனர்.
மஹிந்த தேரர் தலைமையிலான தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்து பௌத்த மதத்தை போதிக்க ஆரம்பித்தமை இன்றுபோன்றதொரு நாளிலாகும். அன்று முதல் இலங்கையில் பௌத்த மதம் வியாபிக்க ஆரம்பித்தது.
அனுராதபுரம் மிஹிந்தலை பகுதிக்கு வருகை தந்த மஹிந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னன் தேவநம்பியதிஸ்ஸ உள்ளிட்ட இலங்கையர்களுக்கு பௌத்த மதத்தை போதித்தனர்.
பௌத்த மதம் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது முதல் நாட்டில் சமய, சமூக கலாசார மறுமலர்ச்சி ஏற்ப்பட்டது. பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசார அடிப்படையிலான நீர்ப்பாசனக் கட்டமைப்பும் விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூக கட்டமைப்பும் வலுப்பெற்றது. இதேவேளை இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...