அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Date:

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவத்தின் போது, அங்குள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது முதன்மைப் பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அமைச்சர் தவறிவிட்டார் எனக் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பிரேரணை மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்களிப்பில், அரசாங்கத்தின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும் வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...