இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

Date:

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர் சதக்கத்துல்லா அவர்கள் காலமானார்.

தேசத்தின் நிதித்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதித் துறை தொடர்பான சிக்கலான விஷயங்களைத் தனது தாய்மொழியான தமிழில் எளிய முறையில் மக்களுக்கு விளக்கிப் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியின் (Reserve Bank Staff College) முதல்வராகப் பணியாற்றி எண்ணற்ற நிதியியல் அறிஞர்களை உருவாக்கியவர். இவரது திறமையான பணிக்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் “சக்சஸ் சதக்கத்துல்லா” எனப் பாராட்டப் பெற்றவர்.

உலக வணிக ஒப்பந்தத்திற்குப் (WTO) பிறகான காலகட்டத்தில் இந்தியாவின் நிதிச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பல்வேறு நிதிக் கொள்கைகளில் இவரது ஆலோசனைகளும் பங்களிப்பும் முக்கிய இடம் பெற்றிருந்தன.

இந்திய நிதித்துறையின் வளர்ச்சிக்கும், தமிழில் பொருளாதார அறிவைப் பரப்பியதற்கும் முனைவர் சதக்கத்துல்லா அவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவிற்குப் பொருளாதார வல்லுநர்களும், துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...

விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ...