இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

Date:

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு நிலை/துறவு நிலையில்லாத மாணவர்களுக்கு ஒருசோடி பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த வேலைத்திட்டம் 2026 ஆம் ஆண்டில் இரண்டு முறைகளின் கீழ் மொத்தம் 836,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்களை உள்ளடக்கி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான பாதணி வழங்குதல் வேலைத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட முறையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை மாகாண ரீதியாக இரண்டு வெவ்வேறு நடைமுறைகளின் கீழ் பாதணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன:

மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கே உள்ளூர் பாதணி உற்பத்தியாளர்கள் நேரடியாகக் கொண்டு வந்து வழங்கி, அவற்றைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணம், வடக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு, அந்தந்தச் சந்தைகளில் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களிலுள்ள துறவு நிலை/துறவு நிலையில்லாத மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 3,000/- பெறுமதியான பரிசுச்சீட்டு (Voucher) ஒன்றை வழங்கி அவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...