குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Date:

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேச அளவில்) அல்லது WhatsApp எண் +94 74 444 1979 (செய்தி பரிமாற்றத்திற்கு மட்டும்) ஆகியவற்றின் ஊடாக விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

அல்லது தங்கள் பயண முகவரை அணுகலாம் அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...