டெங்கு பரவல்: 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறப்பு!

Date:

டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் (University of the Visual and Performing Arts) கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் தொடங்கின.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 2 ஆம் திகதி முதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு குறித்த பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட, வளாகச் சூழலைச் சுத்தமாகப் பராமரிப்பதில் மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 68,071 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில் டெங்கு தொடர்பான 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...