நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரம் சாட்சியமளித்தார்.

நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை சாட்சியப் பதிவு இடம்பெற்றது.

வழக்கு விசாரணைக்குப் பின்னர், சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான தகவல்கள் உள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த சாட்சியங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்றும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 89 சிறைக் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...