QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

Date:

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை (Fuel Quota System) தற்போதைக்கு ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனம் (CPC) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் சந்தையில் நீடித்து வரும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், “உலகளாவிய ரீதியில் நிலவும் மோதல் போக்குகள் மேலும் தீவிரமடைந்தால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் ஏற்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கவுமே இந்த நடைமுறையைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த QR முறைமையானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் நிர்வகிக்க பெரிதும் உதவுகிறது” என்றார்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால பதற்றநிலைகள் இலங்கையின் தற்போதைய எரிபொருள் விநியோக வலையமைப்பிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை கூட்டுத்தாபனம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...