மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற ஆலோசனைகளின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
