முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

போதுமான உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலேயே  இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பை அறிவிக்கும் போதே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து விடுதலை செய்ய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்தது.

அதற்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களைக் கோரும் நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...